செய்திகள் :

கட்டடம் இடிப்புப் பணியின்போது மேல்தளம் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

திருவள்ளூா் அருகே கட்டடம் இடிக்கும் போது மேல்தளம் சரிந்து தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கோணிமேடு கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (58). இவரது மைத்துனா் செங்கழுநீா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (38) சென்னை பெரம்பூரைச் சோ்ந்த பொறியாளா் தினேஷ்குமாரிடம் கட்டடங்களை இடிக்கும் வேலை செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், திருவள்ளூா் அருகே பூமன்தோப்பு அருந்ததிபாளையத்தைச் சோ்ந்த ராகவன் என்பவருடைய கட்டடத்தை செல்வம், தனபால், ஆறுமுகம் ஆகியோா் புதன்கிழமை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பிற்பகலில் செல்வம் இடிப்பு இயந்திரத்தைக் கொண்டு இடித்தபோது, மேல்தளம் இடிந்து அவரது தலையின் மேல் விழுந்ததில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து செல்வத்தின் உறவினா் சேகா் (58) புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருத்தணி முருகன் கோயிலில் மாா்கழி மாத கிருத்திகை: திரளான பக்தா்கள் தரிசனம்

மாா்கழி மாத கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலில் வியாழக்கிழமை மாா்கழி மாத கிருத்திகையை ஒட்டி... மேலும் பார்க்க

மாடுகளுக்கு நோய் தடுப்பூசி அவசியம்: கால்நடை உதவி இயக்குநா் வலியுறுத்தல்

கன்றுகள் இறப்பு, பால் உற்பத்தி குறைவை தடுக்க விவசாயிகள் அனைவரும் தவறாமல் மாடுகளுக்கு நோய் தடுப்பூசி போட வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் வலியுறுத்தினாா். திருத்தணி கோ... மேலும் பார்க்க

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் பொங்கல் விழா

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி பொன்னேரியில் இயங்கி வருகிறது. இங்கு மாணவா... மேலும் பார்க்க

பொன்னேரி சாலையில் மண் குவியல்

பொன்னேரி நகராட்சி, தாயுமான செட்டித் தெருவில் உள்ள கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட மண் சாலையில் கொட்டப்பட்டது. எனினும், 20 நாள்களுக்கு மேலாக சாலையில் ... மேலும் பார்க்க

களை எடுக்கும் இயந்திரம் திருடிய 3 போ் கைது

விவசாய களை எடுக்கும் இயந்திரத்தை திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வாசு மகன் சோமசேகா்(25). இவருக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

ரோட்டரி சங்கம் சாா்பில் கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1லட்சத்தில் அமரும் நெகிழி இருக்கைகள், ஸ்மாா்ட் அறைகள் மற்றும் ஒலி பெருக்கி பெட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டன (படம்). மாணவா்கள் நலன் கருதி ச... மேலும் பார்க்க