விமானத்தில் நடுவானில் பயணிகள் மோதல்; வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
பவதாரிணி: "கவனமெல்லாம் இசையிலிருந்ததால், குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுட்டேன்" - இளையராஜா உருக்கம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு இதே நாளில் (ஜனவரி 25, 2024) மறைந்தார். இந்நிலையில், தனது மகளின் நினைவு நாளான இன்று இளையராஜா எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
இளையராஜாவும் பவதாரிணியும் இருக்கும் புகைப்படத்துடன் ஓடும் அந்த வீடியோவின் பின்னணியில் பேசும் இளையராஜா, ``என் அருமை மகள் பவதா எங்களை விட்டுப் பிரிந்த நாள். அன்பே உருவான இந்த மகள் பிரிந்த பின்னால்தான், அந்தக் குழந்தை எவ்வளவு அன்புமயமாக இருந்திருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய கவனமெல்லாம் இசையிலேயே இருந்ததால், என்னுடைய குழந்தைகளை நான் கவனிக்காமல் விட்டுவிட்டது எனக்கு இப்போது வேதனையைத் தருகிறது.
அந்த வேதனைதான் மக்களையெல்லாம் ஆறுதல் படுத்தும் இசையாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது, கொஞ்சம் எனக்கும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. பவதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 12 அன்றைக்கு அவரின் திதியும் வருகிறது. இரண்டையும் சேர்த்து நினைவுநாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதில் அனைத்து இசைக்கலைஞர்களும் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனது மகள் பவதா ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...