`இதைக் குடியுங்கள்... உங்களை மருத்துவமனையில் சந்திக்கிறேன்'- கெஜ்ரிவாலை சாடிய ரா...
Grammy Awards: `70 வயதில் சாதனை' கிராமிய விருதை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி
உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக Beyoncé-ன் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது. அதிகபட்சமாக ‘Not Like Us’ பாடல் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.
இதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா டாண்டன் என்பவர் ‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக ‘Best New Age Album’ என்ற பிரிவில் விருது வென்றிருக்கிறார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “இசை என்பது காதல், இசை என்பது ஒளி, இசை என்பது சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் எப்போதும் சூழப்பட்டிருப்போம். இசையை உருவாக்கும் அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
70 வயதுடைய சந்திரிகா டாண்டன் சென்னையைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள MCC கல்லூரியில் பயின்றிருக்கிறார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். பெர்க்லீ இசைக்கல்லூரியின் முதல்வருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
இந்துஸ்தானி மற்றும் கர்நாடகம் மேற்கத்திய பாரம்பரியங்களில் மாஸ்டர்களால் பயிற்சி பெற்றவர். உலக அரங்கில் பல இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். இரண்டு முறை கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர் இம்முறை விருதை வென்று அசத்தியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...