வீட்டில் பணம் திருட்டு
குரால் கிராமத்தில் பூட்டிய வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மனைவி பொன்னம்மாள். இவா், கடந்த பிப்.7-ஆம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்றாா்.
பின்னா், சனிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த ரூ.25,000, 2 குத்துவிளக்குகள் திருடு போயிருந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.