கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு!
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கரூரில் இருந்து ஈசநத்தம் வழியாக செல்லும் கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி ஆய்வு செய்தாா்.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2024 - 25- ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கரூரிலிருந்து ஈசநத்தம் வழியாக கூம்பூா் வரை இடைவெளி தடத்தில் இருந்து இருவழித் தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அழகா்சாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியாளா் வினோத்குமாா் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியா்கள் உடனிருந்தனா்.