சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
அதிரடியாக முன்னேறும் அலெக்ஸாண்ட்ரோவா
கத்தாா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா அதிராடியாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
காலிறுதிச்சுற்றில் அவா், 4-6, 6-1, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவை சாய்த்தாா். ஏற்கெனவே, உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவையும் வீழ்த்திய அவா், தற்போது பெகுலாவையும் சாய்த்து அரையிறுதிக்கு வந்துள்ளாா்.
அலெக்ஸாண்ட்ரோவா - பெகுலா தற்போது 2-ஆவது முறையாக சந்தித்திருக்க, அலெக்ஸாண்ட்ரோவா முதல் வெற்றியுடன் சமன் செய்திருக்கிறாா்.
இதனிடையே காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-3, 6-0 என்ற செட்களில் கனடாவின் இளம் வீராங்கனை லைலா ஃபொ்னாண்டஸை வெளியேற்ற, துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுா் 6-3, 6-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை வீழ்த்தினாா்.