கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காய...
இயக்குநரான தயாரிப்பாளர்... அதர்வா புதிய பட அறிவிப்பு!
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தனது முதல் படமாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி, எஸ்டிஆர் 49 ஆகிய திரைப்படங்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கின்றது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/tazwnyjh/aakash_baskaran_1692371098_3172161146908665083_338718848.jpg)
இந்த நிலையில், அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் டான் பிக்சர்ஸ் நிறுவன உரிமையாளாரான தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சொந்தத் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
’இதயம் முரளி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், காயடு லோஹர், தமன், நட்டி, நிஹாரிகா, ஏஞ்சலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் ஜூன், ஜூலை மாதங்களில் திரைக்கு வரவுள்ளதாக டைட்டில் டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மறைந்த நடிகர் முரளியின் மிகவும் பிரபலமான திரைப்படம் ‘இதயம்’. அந்தப் படத்தில் வரும் முரளி கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. தற்போது ’இதயம் முரளி’ திரைப்படத்தில் முரளியின் மகனான அதர்வாவே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.