இலங்கையுடனான சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? மாநி...
சென்னையில் 3 கண்டெய்னர்களில் சட்டவிரோதமாக இறக்குமதியான ரூ.5 கோடி பொருள்கள் பறிமுதல்!
சென்னை : சென்னை துறைமுகத்தில் சட்டவிரோதமாக இறக்குமதியான ரூ.1.47 கோடியிலான வெளிநாட்டு பாட்டாசுகளும், 3 கண்டெய்னர்களில் இருந்து ரூ.5.13 கோடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை சுங்கத்துறை தரப்பில் இன்று(பிப். 13) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பட்டாசுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசின் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே வெளிநட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த நிலையில், உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் நடத்தப்பட்ட சோதனையில், சென்னை துறைமுத்தில் 1.47 கோடி மதிப்பிலான 3,672 பட்டாசுகள் அடங்கிய பெட்டி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 3 கண்டெய்னர்களில் இருந்த ரூ. 5.13 கோடி மதிப்பிலான வாகன பயன்பாட்டுக்கான 516 அலாய் ரக சக்கரங்கள், தடை செய்யப்பட்ட 11,624 ஜோடி காலணிகள், 15,000 கைப்பேசி பேட்டரிகள், மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவையனைத்தும், கல்வித்துறைக்கு தேவைப்படும் உபகரணங்கள் எனக் குறிப்பிடப்பட்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.