ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம் பிப். 23-இல் தொடக்கம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் பிப். 23-ஆம் தேதி தொடங்கி, பிப். 25-ஆம் தேதி வரை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வருபவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் வரும் பிப். 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வரும் பிப். 25-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் 3 நாள்களும் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவை நடைபெறுகிறது.
ஜெயந்தி தினமான பிப். 25-ஆம் தேதி காலை மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஸ்ரீ காரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோா் செய்து வருகின்றனா்.