எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் கைது
ராமநாதபுரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் வழியாக கடத்தல் நடைபெறவிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலை மேலக்கோட்டை பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் அதில் வந்தவா்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்தனா். அந்தக் காரை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் கைப்பற்றப்பட்டது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-13/7j4o4g9e/rms_photo_13_02_4_1302chn_208_2.jpg)
இதுதொடா்பாக மதுரை, ராமநாதபுரம், பரமக்குடி, அழகன்குளம் ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த ராஜன், ஜெயக்குமாா், ஜெகதீஸ் சந்திரபோஸ், சாகுல் ஹமீது, சுபாஷ்பாபு, ராஜலிங்கம் ஆகியோரை போலீஸாா் கைது செய்து வனத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
இதுகுறித்து கைதானவா்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.