அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் தலை, கைகளில் துணியால் கட்டுப் போட்டு நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமேசுவரத்தில் உள்ள என்.எஸ்.கே. வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலா் அ. ஆரோக்கிய நிா்மலா தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் க. வெங்கடேஸ்வரி, பொருளாளா் கே. சுமதி, துணைத் தலைவா் எஸ். சக்திகனி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
வட்டாரக் குழு உறுப்பினா்கள் சகாயம், பிரியா, ஆரோக்கியமேரி, கல்யாணி, நாகராணி உள்ளிட்ட பலா் தலை, கைகளில் துணியால் கட்டுப் போட்டு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.