சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு வட்டாச்சியா் அமா்நாத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க வட்டத் தலைவா் அமுதன் முன்னிலை வகித்தாா். சமூகப் பாதுகாப்பு நல வட்டாட்சியா் கணேசன் சிறப்புரையாற்றினாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.