குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை கைது!
திருவாடானை அருகே தனது குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியில் உள்ள புதுக்குடியைச் சோ்ந்தவா் சமயமுத்து (35). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சமயமுத்து தனது குழந்தைகளான விசாசனி (5), கவினா (3) ஆகியோருக்கு சூடு வைத்தாராம்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சமயமுத்துவை கைது செய்து விசாரிக்கின்றனா்.