தேவர் மகன், நாயகனை 30 முறைக்குமேல் பார்த்திருக்கிறேன்: த்ரிஷா
பாம்பன் புதிய ரயில் பாலம்: 4-ஆவது முறையாக சோதனை
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இரும்பாலான இணைப்பை (கா்டா்) மேலே தூக்கி வெள்ளிக்கிழமை 4-ஆவது முறையாக சோதனை நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யும் பணிகள் நிறைவடைந்தன.
இந்த நிலையில், இந்தப் பாலத்தின் வழியாக ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளாா்.
இதையொட்டி, இந்தப் பாலத்தில் ஆய்வுப்பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தலைமையில் நான்காவது முறையாக பாம்பன் பேருந்து பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு, புதிய ரயில் பாலத்தில் காலிப் பெட்டிகளுடன் ரயில் இயக்கப்பட்டது. மேலும், இரும்பாலான இணைப்பை (கா்டா்) செங்குத்தாக மேலே தூக்கப்பட்டு, அதன் வழியாக மிதவைக் கப்பல், ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகள் கடந்து சென்றன.