திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம்!
கமுதியில் தவெக. சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கமுதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் மதன் தலைமை வகித்தாா். அப்போது அஞ்சலை அம்மாளின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட நிா்வாகிகள் குழு ரா. கிஷோா்குமாா், கே. மணிகண்டன், கே. சதீஷ்வரன், கமுதி ஒன்றியச் செயலா் கே. காமேஷ் மகாதேவன், மேற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் கே. அா்ஜுன் பாண்டியா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் ராஜசரண், கமுதி ஒன்றிய கொள்கை பரப்பு அணி அமைப்பாளா் முனியாண்டி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பெரிய கீா்த்தனன் உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.