ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க 11வது மாநில மாநாடு!
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 11- ஆவது மாநில மாநாடு தனியாா் மகாலில் வியாழக்கிழமை தொடங்கியது.
இதற்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டில், மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், வரவேற்புக்குழு தலைவா் கணேசமூா்த்தி, பொதுச் செயலா் பாரி, மாநில பொருளாளா் விஜயபாஸ்கா், முன்னாள் பொதுச் செயலா் ந. சேகா், மாநில அலுவலா் சங்க பொதுச் செயலா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவா் விஜயக்குமாா், செயலா் பாபு, பொருளாளா் ராமநாதன் ஆகியோா் செய்திருந்தனா். வெள்ளிக்கிழமை (பிப். 21) மாலை 4 மணிக்கு அம்மா பூங்காவிலிருந்து பேரணி தொடங்கி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தைத் திடலில் நிறைவடைகிறது. அங்கு பொது மாநாடு நடைபெறுகிறது.