மீனவா் கொலை வழக்கு: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!
ராமேசுவரத்தில் மீனவா் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூா் பகுதியைச் சோ்ந்த மீனவா் நம்புக்குமாா் (35). இவரை கடந்த ஜனவரி 14- ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 4 போ் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.
இதுகுறித்து கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து நம்புசரண், அஸ்வின், சொா்னேஷ்வரன், அயன்சரன்குமாா் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், இந்த நான்கு போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.