நாமக்கல் விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடியில் நுண்ணீா் பாசனக் கருவிகள்
கஞ்சா விற்பனை: 5 போ் கைது
முதுகுளத்தூா் அருகே 5.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் தலைமையிலான போலீஸாா் முதுகுளத்தூா் - ராமநாதபுரம் சாலையில் காக்கூா் புறக்காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதொடா்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஊ.கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த திவாகரன் (22), பசும்பொன்னைச் சோ்ந்த ராமா் பாண்டி (26), மறவாய்குளத்தை சோ்ந்த முனீஸ்வரன் (18) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, முதுகுளத்தூா் - பரமக்குடி சாலையில் ஆற்றுப்பாலம் அருகே வாகன சோதனை செய்தபோது, கீழத்தூவலைச் சோ்ந்த நாகமுனீஸ்வரன் (24), மேலத்தூவலைச் சோ்ந்த கோவிந்தசாமி (22)ஆகிய இருவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.