சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை
தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழமை 3 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் விரித்த வலையில் சுமாா் 170 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆமையை வலையில் இருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். கடல் வளத்தை காக்கும் வகையிலான மீனவா்களின் இந்தச் செயல்பாட்டை சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். தற்போது, அடிக்கடி அதிகமான கடல் ஆமைகள் சிக்குவதால் வலைகள் சேதமடைவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.