ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
திருவெற்றியூரில் சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்
திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூா் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருவெற்றியூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலுக்கு சுற்று வட்டாரத்திலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வந்து தங்கி சுவாமி தரிசனம் செய்கின்றனா். இவா்கள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இது சேதமடைந்ததையடுத்து, ஊராட்சி நிா்வாகம் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.53 ஆயிரத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. ஆனால் இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட வில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, ஊராட்சி நிா்வாகத்தினா் தக்க நவடிக்கை எடுத்து சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.