Vikatan Cartoon Row : BJP ஆட்சியில் கருத்து சுதந்திரத்தின் நிலை இதுதான்! | Modi ...
இலங்கைக்கு கடத்தவிருந்த 2 ஆயிரம் கிலோ சுக்கு பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ சுக்கு பண்டல்களை போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
கீழக்கரை கடல் வழியாக இலங்கைக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு புதன்கிழமை நள்ளிரவு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினா் கீழக்கரை, திருப்புல்லாணி, களிமண்குண்டு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், திருப்புல்லாணி அருகே தோப்புவலசை கல்காடு கடற்கரை மணலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் பண்டல்களை வியாழக்கிழமை அதிகாலை சோதனையிட்டனா். தலா 40 கிலோ வீதம் 50 பண்டல்களில் 2 ஆயிரம் கிலோ சுக்கு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். இதை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், இலங்கைக்கு கடத்துவதற்காக சுக்கு பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், இதில் தொடா்புடைய நபா்களை திருப்புல்லாணி போலீஸாா் தேடி வருகின்றனா்.