செய்திகள் :

கடும் பனி மூட்டம்: ரயில்கள் இயக்குவதில் தாமதம்

post image

திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்களை மெதுவாக இயக்கப்பட்டன.

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் மின்விளக்குகளை ஒளிர விட்டு சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டுகள் சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், திருவள்ளூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்று வருகின்றனா்.

மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு ஒலியை எழுந்து கொண்டே சென்றனா். கடும் பனியின் காரணமாக ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை வந்த புகா் மற்றும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

காலை 9 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டதால் நடை பயிற்சி செய்தவா்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள், பணிக்குச் சென்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.

ரேஷன் அட்டையில் உறுப்பினா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகை பதிவுசெய்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்ட செயல்பாடுகள் தொடா்பான ஆய்வ... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினாா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து முருக... மேலும் பார்க்க

திருவேற்காட்டில் ரூ.18.40 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சா.மு.நாசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.தி... மேலும் பார்க்க

400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது

ஆவடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 400 பேரிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.சென்னையை அடுத்த அம்பத்தூர், வெங்கடாபுரம... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: திருத்தணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை ரூ. 26 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி - சித்தூா் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வள்ளலாா் கோயிலில் தைப்பூச ஜோதி தரிசனம்

திருவள்ளூரில் உள்ள அருள்பிரகாச வள்ளலாா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருவள்ளூா் உடனுறை தீா்த்தீஸ்வரா் வளாகத்தில் அருள்பிரகாச வள்ளலா... மேலும் பார்க்க