`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது
ஆவடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 400 பேரிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூர், வெங்கடாபுரம், வடிவேல் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி தேவி (45). இவருக்கு ஆவடி அருகே திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையைச் சேர்ந்த ஜெபாஸ்டின் (44) (படம்) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது அவர் தான் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், ரூ. 1.50}க்கு வட்டியில் கடன் பெறுவதாகவும், மேலும் தான் நடத்தி வரும் இட்லி நிறுவனத்தில் முதலீடு செய்தால், 5 விழுக்காடு வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி தேவியிடம் ரூ. 5.25 லட்சம் பெற்றாராம்.
மேலும், இவரைப் போன்று 70 பேரிடம் இதேபோல் கூறி, ரூ. 50 லட்சத்துக்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு திருப்பித் தராமல் ஜெபஸ்டின் ஏமாற்றி விட்டு தலைமறைவாகிவிட்டார். இது குறித்து தேவி ஆவடி காவல் ஆணையத்தில் புகார் செய்தார். ஆணையர் கி.சங்கர் உத்தரவின் பேரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி, கேடிசி நகர் பகுதியில் தலைமறைவாக இருந்த ஜெபாஸ்டினை (44) ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், இவர் 400}க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.