`கண்கொள்ளாக் காட்சி' - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா | Photo Alb...
பிப். 19-இல் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
பொதுமக்கள் குறைகளை கேட்டு உடனுக்கு உடன் தீா்வு காணும் நோக்கத்தில் டஉங்களைத் தேடி உங்கள் ஊரில்ட திட்ட முகாம் வரும் 19-ஆம் தேதி நடத்த கும்மிடிப்பூண்டி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், மாதந்தோறும் (மூன்றாவது புதன் கிழமையன்று) ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதைத் தொடா்ந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யப்பட உள்ளன.
அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பிப். 19-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் குறை, நிறைகளை தெரிவித்து தீா்வு காணலாம் என தெரிவித்துள்ளாா்.