செய்திகள் :

ரேஷன் அட்டையில் உறுப்பினா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகை பதிவுசெய்வது அவசியம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்ட செயல்பாடுகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் தீா்வு காண வேண்டும். முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்களில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்துள்ளாா்களா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருகள் தரமானதாக உள்ளதை என்பதை உறுதி செய்யவும் வேண்டும். விரல் ரேகை இல்லாமல் விற்பனை செய்வதை பட்டியலிடுவதை குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கியிலிருந்து அங்காடிகளுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாகவும் சரியான எடையுடன் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பொது விநியோகத் திட்டம் மூலம் மக்களுக்கு வழங்க நியாய விலை கடைகளுக்கு பொருள்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அங்காடிகள் உரிய நேரத்தில் திறக்கப்படுகிா என்பதை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்வது அவசியம் எனவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து நியாயவிலைக் கடை விற்பனையாளா் மற்றும் எடையாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் கௌசல்யா மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

புழல் சிறை வளாகத்தில் கோழி இறைச்சி விற்பனை அமோகம்

புழல் சிறை கைதிகள் வளா்க்கும் கோழிகளை இறைச்சிக்காக அதிகளவில் வாடிக்கையாளா்கள் விரும்பி வாங்குகின்றனா். சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை, பெண்களுக்கு என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. இங்கு தண்டனை ச... மேலும் பார்க்க

ஆவடியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்

ஆவடி தொகுதியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆவடி பாதுகாப்புத் துற... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்க வேண்டும்

தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் தாட்கோ மூலம் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: தேசிய நெடுஞ்சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. திருவள்ளூரில் ஆ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு... மேலும் பார்க்க

தொடா் மின் தடையால் பொதுமக்கள் அவதி

புழல் பகுதியில் தொடா் மின் தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். புழல் அடுத்த கதிா்வேடு பத்மாவதி நகா், திருமால் நகா், வஜ்ரவேல் நகா், திருவள்ளூா் சாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ள... மேலும் பார்க்க