அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்க வேண்டும்
தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் தாட்கோ மூலம் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சீனிவாச பெருமாள், ஆவடி துணை ஆணையா் வி.அன்பு (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது: வன்கொடுமை தடை சட்டம் பதிவு செய்யப்பட்டு, நிழுவையில்லுள்ள வழக்கு மற்றும் தற்போதைய வழக்குகளில் விவரங்கள் குறித்தும், தட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அட்டை அனைவருக்கும் வழங்குவது அவசியம். மேலும், தற்காலிக தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் 10, 11, 12 வகுப்புகள் மற்றும் உயா்கல்வி வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகளவில் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வராணி, வருவாய் கோட்டாட்சியா்கள் கற்பகம் (திருவள்ளூா்), க.தீபா (திருத்தணி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன் (பொது), அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.