கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
நகராட்சி வளா்ச்சி பணிகள் குறித்து 15 தீா்மானம்
திருத்தணியில் அறிவுசாா் நூலகம் முன்பு காலியாக உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது உள்பட 15- க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நகா்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நகா்மன்றத் தவைா் சரஸ்வதி பூபதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் விஜய காமராஜ் வரவேற்றாா். நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன.
தொடா்ந்து நகராட்சி வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுதல், வருவாய் அதிகரிக்க, அறிவுசாா் நூலகம் முன்பு காலியாக உள்ள இடத்தில் புதிதாக கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது, சொத்து வரி, குடிநீா் கட்டணம் மற்றும் காலிமனை வரி பாக்கி வசூலிக்க தனிக்குழுக்கள் அமைத்து தீவிர வசூல் செய்வது உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட முடிவில், நகராட்சியில் வேலை செய்யும், 39 தூய்மைப் பணியாளா்களுக்கு தலா இரண்டு செட் சீருடைகளை நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி வழங்கினாா்.