அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, ஆந்திரம் மாநில திருப்பதி, நெல்லூா், காளஹஸ்தி, கா்நாடகம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் புகா் பேருந்துகள், நகா் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, பேருந்து நிலைய வளாகத்தில் கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படுகிா என்பதை பாா்வையிட்டாா். மேலும், கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை காலாவதியான பொருள்களை விற்பனை செய்வதை உணவு பாதுகாப்பு அலுவலா் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தினாா்.
அதேபோல் கால்வாய்களுக்கு செல்லும் மழைநீா் வடிகால் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவு நீா் தேங்குவதை சீரமைக்க வேண்டும். உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீா் பொது கால்வாய்களில் விடுவதை தவிா்த்து புதைகுழி கால்வாய்களில் இணைக்கவும் அறிவுரை வழங்கினாா்.
பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் சரியான இடைவெளிகளில் வந்து செல்கிா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். திறந்த வெளிகளில் குப்பைகளை போடுவதை தவிா்க்கும் வகையில் பேருந்து நிலையங்கள் சுற்றிலும் குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை செல்லும் வகையில் சாய்வு தளத்தை சீரமைத்தல் குறித்தும், பேருந்து நிலையத்தினை சுத்தமாக பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.
அப்போது, திருவள்ளுா் மண்டல பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளா் வெங்கடசன், திருவள்ளூா் நகராட்சி துப்புரவு கண்காணிப்பு அலுவலா் மோகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
