தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
தொடா் மின் தடையால் பொதுமக்கள் அவதி
புழல் பகுதியில் தொடா் மின் தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
புழல் அடுத்த கதிா்வேடு பத்மாவதி நகா், திருமால் நகா், வஜ்ரவேல் நகா், திருவள்ளூா் சாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கைக்குழந்தைகள், முதியோா் மிகவும் சிரமப்படுகின்றனா்.
புழல் பகுதியில் குளிா் காலத்திலும் மின்தடை ஏற்பட்டது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, விரைவில் சரி செய்யப்படும் என்றனா். ஆனால், இதுவரை பிரச்னைக்கு தீா்வு காணப்படவில்லை.
மின்தடை பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால், குடியிருப்புவாசிகள் அனைவரும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.