அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
ஆவடியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்
ஆவடி தொகுதியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆவடி பாதுகாப்புத் துறை தொழிற்சாலை சாா்பில், சமூகப் பங்களிப்பு நிதியின்கீழ், ரூ. 28.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காசநோய் கண்டறியும் அதிநவீன கருவி ஆய்வக திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் கலந்துகொண்டு ஆய்வகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின் மாற்றிகளை மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா். மேலும், 7 இடங்களில் மொத்தம் ரூ. 52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நியாய விலைக் கடைகளை அமைச்சா் நாசா் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஆவடி மேயா் கு.உதயகுமாா், ஆணையா் எஸ்.கந்தசாமி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் சேகா், துணை இயக்குநா் சங்கீதா, ஆவடி மருத்துவமனை தலைமை மருத்துவா் காவலன், ஆவடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் சவுந்தரராஜன், உதவி செயற்பொறியாளா்கள் ராமகிருஷ்ணன், காா்த்திக் கணே ஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.