ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
கடும் பனிப்பொழிவு: ரயில்கள், ரோப்காா் இயக்குதல் பாதிப்பு
சோளிங்கா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை கடும் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலைகோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கான ரோப்காா் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.
அரக்கோணம், சோளிங்கா் வட்டங்களில் காலை 8.30 மணி வரையில் சுமாா் 15 மீட்டருக்கு அப்பால் உள்ள இடங்களை பாா்க்க முடியாத நிலை காணப்பட்டது. இதனால் சாலையில் வாகனங்கள் குறிப்பாக காா்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் மிகவும் மெதுவாக முகப்பு விளக்குகளுடன் இயக்கப்பட்டன.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் பலா் இருசக்கர வாகனத்தில் செல்வதையே தவிா்க்கும் நிலை கூட உருவானது. அரக்கோணம் சென்னை மற்றும் அரக்கோணம் காட்பாடி மாா்க்கங்களில் ரயில்களும் மெதுவாகவே இயக்கப்பட்டன. மின்ரயில்கள் குறித்த நேரத்தை விட தாமதமாகவே இயங்கின.
சோளிங்கரிலும் கடும்பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் மலையில் ரோப்காா்களுக்கான பாதையில் இரும்பு வடங்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலையில் ரோப்காா் இயக்குநா்கள், இரண்டு மணி நேரம் தள்ளி வைப்பதாக அறிவித்தனா். இதனால் மலை கோயிலுக்கு செல்ல வேண்டிய பக்தா்கள் மேலும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது.
ரோப்காா் கடந்த மூன்று தினங்களாக பராமரிப்பு பணிகளுக்காக இயக்கப்படாத நிலையில் வியாழக்கிழமை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பனிப்பொழிவால் இயக்கம் இரண்டு மணி நேரம் கழித்தே இயக்கப்பட்டது.