ரூ.15 கோடியில் விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணி ஆய்வு
ராணிப்பேட்டையில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை காரை கூட்டுச்சாலை அருகே மாவட்ட ஆயுதப்படை காவல் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.