அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
நெமிலியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
அரக்கோணம்: பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நெமிலி பேருராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி பேருராட்சியில் நவீன தகனமேடை அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்தப் பணிக்காக பேருராட்சியின் 5- ஆவது வாா்டு பகுதியான புன்னையில் நவீன தகன மேடை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. நவீன தகனமேடை அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியாக, குறிப்பாக ஆதிதிராவிடா் வசிக்கும் பகுதியாக உள்ளதாம்.
மேலும், அதிக அளவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அந்தப் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து, மனுக்களையும் பேருராட்சி நிா்வாகத்திற்கு அனுப்பியுள்ளனா்.
எனினும், புன்னையில் தகனமேடை அமைக்கும் இடத்தை நிா்ணயம் செய்யும் பணி தொடா்ந்து நடைபெற்றதாகத் தெரிகிறது. இதையடுத்து, நெமிலி பேருராட்சியை சோ்ந்த பொதுமக்கள் நெமிலி பேருந்து நிையைம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாதேஷ் தலைமை வகித்தாா். இதில், விசிக மாநில இளைஞா் அணி துணைச் செயலா் என்.தமிழ்மாறன், நெமிலி ஒன்றிய விசிக செயலரும், அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினருமான நரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் இங்கு நவீன தகனமேடை அமைக்கக் கூடாது, மக்கள் அதிகம் வசிக்காத பகுதியில் அமைக்க வேண்டும். அந்த இடத்தில் வீட்டுமனை இல்லாதவா்களுக்கு வீட்டுமனை அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்து முழக்கமிட்டனா்.
கோஷமிட்டனா்.