சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
அரக்கோணத்தில் ரூ. 14 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: நகா்மன்றத் தலைவா் அடிக்கல்
அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு ரூ. 14 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா்.
அரக்கோணம் நகராட்சி அசோக் நகரில் உள்ள நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-25-இன் கீழ், ரூ. 14 லட்சத்தை அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் ஒதுக்கினாா். இந்தப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நகா்மன்ற உறுப்பினா் வடிவேல்வண்ணன் தலைமை வகித்தாா். பணிக்கு அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி அடிக்கல் நாட்டினாா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் சிட்டிபாபு, திமுக அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்ட அமைப்பாளா் சரவணன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் தாட்சாயினி, வட்டச் செயலாளா் பாரி, அப்பகுதி திமுக நிா்வாகிகள் இ.பிரகாஷ், விஜயலட்சுமி, சுந்தரலிங்கம், காா்த்திக், ரவி, பழனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.