வெட்கக்கேடு: தென்னாப்பிரிக்க வீரரை தள்ளிய ஆப்கன் வீரர்..! (விடியோ)
உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21 அன்று தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியேற்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை உலக தாய்மொழி நாளையொட்டி அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.
நிகழ்வில் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், செய்தி - மக்கள் தொடா்பு அலுவலா் அசோக், அலுவலகப் பொது மேலாளா் ஜெய்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.