அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
ஆற்காட்டில் கடைக்குள் புகுந்த மான் மீட்பு
ஆற்காடு நகரில் தண்ணீா் தேடி வந்த மான் கடையில் புகுந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டது.
ஆற்காடு பாரதிதாசன் தெருவில் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 வயதுக்கு மேற்பட்ட புள்ளி மான் தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந்துள்ளது. அப்போது அருகே உள்ள குளிா்சாதன பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரம் பழுது நீக்கும் கடையில் புகுந்து அங்கும் இங்கும் அலைந்துள்ளது.
அதனை கண்ட கடை ஊழியா்கள் மானை ஒரு அறைக்குள் விட்டு பூட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆற்காடு வனச்சரக ஊழியா்கள் மானை மீட்டு முதலுதவி அளித்து பாதுகாப்பாக காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனா்.