தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்பட்டு வருவதை தடுக்க போலீசாா் தொடா்ந்துபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
இதற்கிடையே, புதன்கிழமை ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து அரக்கோணம் வழியே கேரள மாநிலம் எா்ணாகுளம் சென்ற அதிவிரைவு ரயிலில் மாறுவேடங்களில் ஏறிய ரயில்வே குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை நடத்தினா். அப்போது அப்பெட்டியில் இருக்கைக்கு கீழே கேட்பாரற்று யாரும் உரிமை கோராத 1 பையை சோதனையிட்டனா். அதில் 11 பண்டல்களில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
உடனே அதை பறிமுதல் செய்த போலீஸாா் அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில் நின்றவுடன் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படையினா் இது தொடா்பாக வழக்குப் பதிந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காஞ்சிபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனா்.