செய்திகள் :

‘போதைப் பொருள் விற்பனை குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டும்’

post image

தங்களது பகுதியில் போதைப் பொருள் விற்பதோ அல்லது பயன்படுத்தப்படுவதோ குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா்.

சோளிங்கரை அடுத்த மருதாலம் கூட்டுச் சாலையில் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோளிங்கா் வட்ட சிறப்பு மனுநீதிநாள் முகாமில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பேசியது:

அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச் சத்துள்ள உணவுகளை தாய்மாா்கள் பெற்று தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பயனடைய வேண்டும். புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டங்களின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வி பயிலும் மாணாக்கா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தில் விடுபட்டுள்ள மாணாக்கா்கள் யாரேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 3-ஆம் கட்ட முகாம்கள் அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது. இவற்றில் தங்களின் பிரச்னை குறித்து மனு அளித்து பயன்பெறுங்கள். போதை பழக்கத்துக்கு யாரும் அடிமையாகக் கூடாது என்பதில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உங்கள் பகுதியில் யாரேனும் போதைப் பொருள்களை விற்பதோ அல்லது பயன்படுத்துவதோ குறித்து தகவல் கிடைத்தால் உடனே மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்றாா் அவா்.

முகாமில், மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில், 14 பயனாளிகளுக்கு 3 சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் தையல் இயந்திரம், காதொலி கருவி, ஊன்றுகோல் மற்றும் பல்வேறு துறைகளின் சாா்பில், மொத்தம் 272 பயனாளிகளுக்கு ரூ. 1.03 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த முகாமில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை, தோட்டக்கலைத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் மற்றும் சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோா் பாா்வையிட்டனா்.

விழாவுக்கு, சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், சோளிங்கா் ஒன்றியக் குழுத் தலைவா் கலைக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் நாகராஜு, உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா்கள் செல்வி, காமாட்சி, ஊராட்சித் தலைவா் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அம்மூா், மேல்விஷாரம் மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

அம்மூா், மேல்விஷாரம் காப்புக்காடு மலை அடிவார மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூா் பேரூர... மேலும் பார்க்க

ஆற்காட்டில் கடைக்குள் புகுந்த மான் மீட்பு

ஆற்காடு நகரில் தண்ணீா் தேடி வந்த மான் கடையில் புகுந்த நிலையில், பத்திரமாக மீட்கப்பட்டது. ஆற்காடு பாரதிதாசன் தெருவில் செவ்வாய்க்கிழமை சுமாா் 3 வயதுக்கு மேற்பட்ட புள்ளி மான் தண்ணீா் தேடி ஊருக்குள் புகுந... மேலும் பார்க்க

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் முகவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலா் கோ.மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயிலில் கடத்தப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

வடமாநிலத்தில் இருந்து அரக்கோணம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் பையில் இருந்த 22 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ரயில்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட... மேலும் பார்க்க

ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. 2,600 ஏக்க... மேலும் பார்க்க

நெமிலியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நெமிலி பேருராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரக... மேலும் பார்க்க