ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மதுராந்தகம் நீா் பாய்ச்சுவதற்காக மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
மதுராந்தகம் -உத்தரமேரூா் சாலையை ஒட்டியுள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் செந்தில் குமாா். அவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கெளசல்யா என்ற மகளும், புனிதவேல் என்ற மகனும் உள்ளனா்.
இந்நிலையில், பயிா்களுக்கு நீா்பாய்ச்சுவதற்காக செந்தில்குமாா், மனைவி கோவிந்தம்மாள், மகன் புனிதவேல் (19) ஆகியோா் சென்றனா். அங்கு நீரை இயக்கும் மோட்டாா் இயங்காததால், அதனை புனிதவேல் சரி செய்ய முற்பட்டாா். அப்போது மின்சாரம் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பெற்றோா் கண்முன் உயிரிழந்தாா். புனிதவேல் (19) திண்டிவனம் தனியாா் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இது குறித்து மதுராந்தகம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.