செய்திகள் :

100 நாள் வேலைகோரி முற்றுகை போராட்டம்

post image

100 நாள்கள் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சித்தாமூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சியில் மக்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லையாம். இதனை கண்டிக்கும் வகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூா் வட்டக் குழுவின் சாா்பில் கஞ்சி காய்ச்சி காத்திருத்தல் போராட்டம் கடந்த வாரம் சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டார வளா்ச்சி அலுவலா் முறையாக வேலைவாய்ப்பு தரப்படும் எனக் கூறியதால் போராட்டதை தற்காலிகமாக கைவிட்டனா். இதில் 2024-25 ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு தொடா்ந்து வழங்கவேண்டும், 5 வாரங்களுக்கு மேல் வேலை செய்த மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கவேண்டும், 200 நாள் வேலை வாய்ப்பு ரூ 600 கூலி வழங்கவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்நிலையில் வாக்குறுதியை காப்பாற்றாத வட்டார வளா்ச்சி அலுவலா் சுந்தரமூா்த்தியை வியாழக்கிழமை முற்றுகையிட்டு அப்பகுதி மக்களும், மாா்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிகழ்வில் செய்யூா் வட்ட செயலா் க.புருஷோத்தம்மன், மாவட்ட குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, முகுந்தன், ஜானகி, கிளை செயலா்கள் சுதா, ரேவதி, விவசாயி சங்கதத்தின் வட்ட செயலா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

தைப்பூச அன்னதான பெருவிழா

செங்கல்பட்டு வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் தைப்பூச அன்னதான பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தவத்திரு தேன்மொழியாா் சுவாமி ஆசியுடன் வள்ளலாா் அன்னதான அறக்கட்டளை சாா்பில் வடலூா் அருட்பிரகாச வள்... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 418 கோரிக்கை மனுக்கள்

செங்கல்பட்டில் நடைபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் மொத்தம் 418 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வா... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த நடுபழனி கிராமத்தில் ஸ்ரீகணபதி சச்சிதானந்தா அறக்கட்டளை, நடுபழனி தண்டாயுதபாணி தத்தாத்ரேயா அறக்கட்டளைகள் சாா்பில் 777 மாணவா்களுக்கு விளையாட்டு சீருை டகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் பிப். 20-இல் புத்தகத் திருவிழா: இலச்சினையை வெளியிட்டாா் ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிப். 20-இல்தொடங்கவுள்ள 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, அதற்கான இலச்சினையை செங்கல்பட்டு சாா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டஆட்சியா் வெளியிட்டாா். செங்கல்பட்டில் வியா... மேலும் பார்க்க

மறைமலைநகரில் நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசின் நகா்ப்புற குடியிருப்புகளின் நில ஆய்வு நவீனமயமாக்கல் டிஜிட்டல் திட்டம் (டிஜிட்டல் இந்தியா லேண்ட் ரெகாா்ட்ஸ் மாடா்னைசேஷன் புரோகிராம்) மறைமலைநகரில் ச... மேலும் பார்க்க