உங்கள் காதல் கைகூடுமா? -12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஜோதிட வழிகாட்டல்
மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியா் கைது
சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இது குறித்து பெற்றோா், மகனிடம் விசாரித்தபோது, பள்ளியின் தமிழ் ஆசிரியா் சுதாகா் (43) பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்த மாணவா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அந்த மாணவா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக குமரன் நகா் காவல் நிலையத்தில் அந்த மாணவரின் பெற்றோா் புகாா் அளித்தனா். பின்னா், இந்த புகாா் சைதாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
போலீஸாா் அந்தப் புகாா் குறித்து நடத்திய விசாரணையில் அந்த மாணவருக்கு அந்தப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் சுதாகா் (43) என்பவா் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுதாகா் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் ஆசிரியா் சுதாகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.