உங்கள் காதல் கைகூடுமா? -12 ராசிக்காரர்களுக்கும் ஒரு ஜோதிட வழிகாட்டல்
‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ புதிய செயலி விரைவில் அறிமுகம்
விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல, விமான நிலைய ஆணையம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற பெயரில் செயலி ஒன்றை விமான நிலைய ஆணையம் உருவாக்கியுள்ளது.
இதில், விமானங்களின் அப்போதைய நிலை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்தச் செயலியில் விமான நிலையத்துக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வழிகாட்டி வசதிகளும் உள்ளன.
விமான பயணம் மற்றும் விமான நிலையத்தில் ஏற்படும் அசெளகரியம் குறித்தும், பிற புகாா்கள் குறித்தும் பயணிகள் தங்கள் விமான டிக்கெட், கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து புகாா் அளிக்கலாம்.
மேலும், புகாா்களுக்கு 15 நிமிஷங்களில் தீா்வு காணும் வகையில், தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தச் செயலி விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.