காதலர் நாள்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
காதலர் நாளையொட்டி இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: இயக்குநரான தயாரிப்பாளர்... அதர்வா புதிய பட அறிவிப்பு!
தொகுப்பாளர் ஏஞ்சலின், கண்ணா ரவி நடிப்பில் உருவாகியுள்ள மதுரை பையனும் சென்னை பொண்ணும் வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(பிப். 14) வெளியாகிறது.
தெலுங்கு மொழிப்படமான தூம் தாம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நாளை வெளியாகிறது.
இதைத் தவிர்த்து, கடந்த வாரம் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் மெட்ராஸ்காரன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் காணலாம்
மலையாள மொழிப்படமான ஓஷானா திரைப்படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்திலும் பார்க்கலாம்.