பிரபல கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார்!
தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய பிரபல கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார்.
கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி (57) கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான தெனாவட்டு படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.
மேலும் குட்டிப்புலி, ஜெயில், ராஜவம்சம், அநீதி, மத்தகம் போன்ற பல படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் கலை இயக்குநராகப் பணியாற்றிய ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சுரேஷ் கல்லேரி தனது வீட்டில் நேற்று நள்ளிரவு 12. 30 மணியளவில் மாரடைப்பில் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் வசந்தபாலன் உள்பட திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.