ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.சண்முகவேல் தலைமை வகித்தாா். செயலாளா் பா.ராஜா கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். மாவட்ட துணைத்தலைவா் கி.கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை உடனடியாக தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளா்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும். 5,000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை -2 என்ற கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சுகாதார ஆய்வாளா்கள் திரளாக பங்கேற்றனா். நிறைவாக மாவட்ட பொருளாளா் ஆ.அருள்முருகன் நன்றி கூறினாா்.