ராமநாதபுரத்தில் ரூ. 4 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீா் பறிமுதல்: 6 போ் ...
திமுக மாவட்டப் பொறுப்பாளராக மு. அப்துல் வகாப் மீண்டும் நியமனம்
திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக இருந்த டி.பி.எம்.மைதீன்கான் மாற்றப்பட்டு, புதிய பொறுப்பாளராக மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையொட்டி, திருநெல்வேலி நகரத்தில் மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா். இதில், திமுக மத்திய மாவட்ட அவைத் தலைவா் வி.கே.முருகன், மேலப்பாளையம் மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினா்கள் சுதா, மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.