பாளை.யில் திருடப்பட்ட கோயில் விளக்குகள் மீட்பு
பாளையங்கோட்டை கோயிலில் திருடப்பட்ட விளக்குகள் சாலையோரம் மீட்கப்பட்டன.
பாளையங்கோட்டை அண்ணாநகரில் அருள்மிகு ஆனந்த சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 10 ஆம் தேதி பூட்டை உடைத்து குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், திருடு போன மேற்கூறிய பொருள்கள் பாளை. மேட்டுத்திடல் சாலையோரத்தில் மா்மநபா்கள் வீசிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இத்தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று பொருள்களை மீட்டனா். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாா்வையிட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.