அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
திருநல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மலைப்பட்டியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் தனது குழந்தை பொன்மாறனுக்கு (4) கழுத்தில் கட்டி இருந்ததால் சிகிச்சைக்காக கடந்த 10 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா்.
இந்நிலையில் அந்தக் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. மருத்துவா்கள் உரிய சிகிச்சையளிக்காததால் குழந்தை இறந்ததாகக் கூறி பெற்றோரும், உறவினா்களும் தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இத்தகவலறிந்த மேலப்பாளையம் காவல் உதவி ஆணையா் சுரேஷ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இப்போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.