மேலப்பாளையம் மண்டலத்தில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட சுத்தமல்லி தலைமை குடிநீா் ஏற்றும் நிலையத்தில் இருந்து ஆசிரியா் காலனி மற்றும் மகிழ்ச்சி நகா் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டிக்கு வரும் பிரதான குழாயில் அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் தருவை அருகே இரு இடங்களில் புதிய குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால் இம் மாதம் 15, 16 ஆம் தேதிகளில் மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 40, 41, 42, 51, 53, 54 ஆகிய வாா்டு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.