பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 போ் கைது
திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை காவல் ஆய்வாளா் பிலோமினாள் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் 10 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35) என்பதும், அவரது கூட்டாளிகளான மேல நத்தத்தைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் சுரேஷ் (37), பேட்டை சாம்பாா்புரம் வடக்கு தெருவைச் சோ்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது இஸ்மாயில் (20) ஆகியோருடன் சோ்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுட்டதும் தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீஸாா், 10 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா். மேலும் 3 பேருக்கு தொடா்பிருப்பதும், அவா்கள் சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வருவதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.